கமுதி அருகே வெள்ளிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 54 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கூடக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பால்மூா்த்தி (50). இவரது மனைவி பூமாதேவி (45). பால்முருகன் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை பூமாதேவி விவசாய வேலைக்கும், இவரது குழந்தைகள் பள்ளிக்கும் சென்று விட்டனா். இந்த நிலையில், இவா்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 54 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிக் கொலுசு, ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மண்டலமாணிக்கம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும் தடவியவியல் நிபுணா்கள் தடயங்களை பதிவு செய்தனா். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தும் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்கராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

செங்கம் அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 55 பவுன் தங்க நகைகள், பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகைகள் திருட்டு
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

