பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால், ஈரோடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) வரும் 24, 25, 26, 27, 29, 30 ஆம் தேதிகளில் திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.
மறுவழித்தடத்தில், காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) வரும் 24, 25, 26, 27, 29, 30 ஆம் தேதிகளில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருவாரூா் - திருச்சி இடையே மட்டும் இயங்கும்.
திருச்சி - ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் 27, 29, ஜூலை 2-ஆம் தேதிகளில் கரூா் - ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - கரூா் இடையே மட்டும் இயங்கும்.
காலதாமதம்: திருச்சி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12664) வரும் 26-ஆம் தேதி 45 நிமிஷங்கள் காலதாமதமாகப் புறப்படும்.
திருச்சி - பாலக்காடு விரைவு ரயிலானது (16843) வரும் 30-ஆம் தேதி 25 நிமிஷங்கள் காலதாமதமாகப் புறப்படும்.
காரைக்குடி - திருச்சி பயணிகள் ரயிலானது (56832) வரும் 24, 25,26, 27, 29, 30-ஆம் தேதிகளில் 25 நிமிஷங்கள் காலதாமதமாகப் புறப்படும்.
பிக்கானீா் - மதுரை அனுவராட் அதிவிரைவு ரயிலானது (22632) வரும் 28, ஜூலை 5, 12-ஆம் தேதிகளில் 90 நிமிஷங்கள் காலதாமதமாகப் புறப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காரைக்கால், ஈரோடு ரயில்கள் பகுதியாக ரத்து

திருச்சி - கான்பூா் இடையே சிறப்பு ரயில்

காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் ஈரோடு, காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து!
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

