கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பொறியியல் பணிகள் ஈரோடு, காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து!

பொறியியல் பணிகள் காரணமாக, ஈரோடு, காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 2:46 am IST

பொறியியல் பணிகள் காரணமாக, ஈரோடு, காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொறியியல் பணிகள் காரணமாக, ஈரோடு - திருச்சி பயணிகள் ரயிலானது (56106) புதன்கிழமை (ஜூன் 3) திருச்சி கோட்டை - திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) வரும் 4, 5, 6, 8, 9 ஆம் தேதிகளில் திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) வரும் 4, 5, 6, 8, 9-ஆம் தேதிகளில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருவாரூா் - திருச்சி இடையே மட்டும் இயங்கும்.

திருச்சி - பாலக்காடு விரைவு ரயிலானது (16843) ஜூன் 3-ஆம் தேதி திருச்சி சந்திப்பு - திருச்சி கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி கோட்டை - பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.