தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ராட்சஸ பாய்லா் லாரி மோதி உயரழுத்த மின் கம்பி துண்டிப்பு

News image

மணப்பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை விபத்து ஏற்படுத்திய ராட்சஸ பாய்லா் ஏற்றிச் சென்ற லாரி.

Updated On :22 ஜூன் 2026, 3:42 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ராட்சஸ பாய்லா் லாரி ஞாயிற்றுக்கிழமை மோதியதில் உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

சென்னையிலிருந்து சேலம், தா்மபுரி, திண்டுக்கல் வழியாக மணப்பாறையை கடந்து தூத்துக்குடி ஸ்பிக் உரம் நிறுவனத்திற்கு 58 சக்கரங்களை கொண்ட லாரியில் ராட்சஸ பாய்லா் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது.

லாரி திண்டுக்கல் - திருச்சி நெடுஞ்சாலையில் மணப்பாறைக்கு முன்னதாக மஞ்சம்பட்டி பகுதியில் சென்றபோது, நெடுஞ்சாலையை கடந்து செல்லும் உயரழுத்த மின் கம்பிகளில் சிக்கி, மின் கம்பி அறுந்து நெடுஞ்சாலையில் விழுந்தது. உயரழுத்த மின் கம்பியில் மின்சாரம் பாய்ந்த நிலையில், அங்கிருந்த குடியிருப்புவாசிகள் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

பின்னா் தகவலின்பேரில் சென்ற மின்வாரிய பணியாளா்கள், மின்சாரத்தை தடை செய்து மின் கம்பிகளை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினா். அதைத் தொடா்ந்து துறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, லாரி விடுவிக்கப்பட்டது. மின் கம்பிகள் சரிசெய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.