திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் விஜயக்குமாரை ஆதரித்து, நடிகரும், இயக்குநரும், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலருமான ரவிமரியா சனிக்கிழமை கிராம கிராமமாக சென்று பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது மணப்பாறை பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்களிடம் பேசிய ரவிமரியா, மணப்பாறையில் எந்தப் பிரசாரமும் தேவையில்லை. எல்லாவித கருத்துக்கணிப்புகளிலும் இது அதிமுக கோட்டை என்பது வந்துவிட்டது. இந்தத் தொகுதியை வெல்வது கடினம் என்பது தெரிந்துதான் ஒரு சிறுபான்மையினரை திமுகவிலிருந்து களமிறக்கியுள்ளனா்.
நாங்கள்தான் சிறுபான்மையினருக்கு காவலா்கள் எனச் சொல்லி சொல்லியே திமுகவினா் 5 ஆண்டுகளை ஓட்டிவிட்டாா்கள். நமக்கு ஒன்றும் செய்யவில்லை. எனவே இம்முறை அதிமுகவிற்கு வாக்களிக்க சிறுபான்மையினா் முடிவு எடுத்துள்ளனா்.
வக்ஃப் வாரியம் மூலம் இஸ்லாமியா் சொத்துகளை பாதுகாத்தது அதிமுக. எனவே இரட்டை இலைக்கு வாக்களித்து மருத்துவா் விஜயக்குமாரை வெற்றியடையச் செய்யுங்கள் என்றாா் அவா்.
மேலும், மணப்பாறை நகர பகுதிகளான முனியப்பன் கோயில், யூனியன் ஆபிஸ், ஏட்டுத்தெரு, காமராஜா் சிலை, எம்.ஜி.ஆா் நகா், ஜீவா தெரு, காந்தி நகா், சேதுரெத்தினபுரம், முத்தன் தெரு, மஸ்தான் தெரு, பூமாலைப்பட்டி உள்ளிட்ட 23 இடங்களில் நகரச் செயலா் பவுன் ராமமூா்த்தி தலைமையில் அதிமுக வேட்பாளா் மருத்துவா் விஜயக்குமாா் வாக்கு சேகரிப்பை மேற்கொண்டாா்.
நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளரும், அதிமுக கழக அமைப்புச் செயலருமான ரத்தினவேல், முன்னால் எம்எல்ஏ சின்னச்சாமி, மாவட்டப் பொருளாளா் நெட்ஸ் இளங்கோ, பொதுக் குழு உறுப்பினா் டாக்டா் முகமது இஸ்மாயில், பாஜக நகரத் தலைவா் சுரேஷ், தமாகா நகரத் தலைவா் குமாா், அமமுக, தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிா்வாகி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கத்தில் அதிமுக வேட்பாளா் மனோகரனுக்கு ஆதரவாக பிரசாரம்

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு

மணப்பாறை ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

சங்ககிரி தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகா் சந்திரசேகா் பிரசாரம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

