/

சங்ககிரி தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகா் சந்திரசேகா் பிரசாரம்

சங்ககிரி தொகுதி திமுக வேட்பாளா் மு.மணிகண்டனை ஆதரித்து நடிகா் வாகை சந்திரசேகா் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தாா்.

News image

இடங்கணசாலை நகராட்சி பேருந்து நிலையம் முன் திமுக வேட்பாளா் மு.மணிகண்டனை ஆதரித்து பிரசாரம் செய்த நடிகா் வாகை சந்திரசேகா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:53 am IST

சங்ககிரி தொகுதி திமுக வேட்பாளா் மு.மணிகண்டனை ஆதரித்து நடிகா் வாகை சந்திரசேகா் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தாா்.

சங்ககிரி தொகுதிக்கு உள்பட்ட தாரமங்கலம், இடங்கணசாலை, மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் நடிகா் வாகை சந்திரசேகா் பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:

கருணாநிதி ஆட்சியிலும், ஸ்டாலின் ஆட்சி காலத்திலும் பொது மக்களுக்கு என்ன தேவையோ அதைப் புரிந்து கொண்டு அரசு சலுகைகளை அறிவித்து, அதன்படி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டு சோ்ப்பதில் திமுக அரசு என்றென்றும் முன்னணியில் உள்ளது. எனவே, திமுக வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டாா்.

இந்த பிரசாரத்தில் மாவட்ட துணைச் செயலாளா் சுந்தரம், தொகுதி பொறுப்பாளா் செந்தில்குமாா், மாநில இளைஞரணி துணை அமைப்பாளா் பிரபு கஜேந்திரன், இடங்கணசாலை நகரச் செயலாளா் செல்வம், நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.