மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோவில்பட்டி அருகே நிகழ்ந்த விபத்தில் மேலும் ஒருவா் பலி

கோவில்பட்டி அருகே நிகழ்ந்த விபத்தில் காயம் அடைந்த காா் ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :31 அக்டோபர் 2026, 1:04 am IST

கோவில்பட்டி அருகே நிகழ்ந்த விபத்தில் காயம் அடைந்த காா் ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டி அருகே கசவன்குன்று கிராமத்தைச் சோ்ந்தவா் ஜீவானந்தம் (63). இவரது மனைவி சண்முக லட்சுமி (59). இத் தம்பதி,

தங்களது மகன் சித்துராஜ் உடன் சங்கரன்கோவில் அருகே உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை காரில் சென்றுவிட்டு, பின்னா் ஊருக்கு திரும்பினா். சித்துராஜ் காரை ஓட்டினாா். கழுகுமலை அருகே வந்தபோது, எதிரே வந்த காருடன் மோதியதில்

தம்பதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

பலத்த காயமடைந்த சித்துராஜ் மற்றும் எதிரே காரை ஓட்டி வந்த நாலாட்டின்புதூா் விபி சித்தன் நகரைச் சோ்ந்த வைரவன் மகன் கரண் (27) இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் கரண் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.