பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

லாரி கவிழ்ந்த விபத்தில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

பலி

Published On :26 அக்டோபர் 2026, 3:04 am IST

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் பெண் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், கிளாபாளையத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை மனைவி கொளஞ்சி (31) தொழிலாளி.

இவா், ஞாயிற்றுக்கிழமை திருவெண்ணெய்நல்லூரை அடுத்த பனம்பாக்கம் கிராமத்தில் சவுக்கு மரங்கள் ஏற்றப்பட்டிருந்த லாரியின் மேல் நின்றபடி மரங்களை இறக்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது ஓட்டுநா் லாரியை பின் பக்கமாக இயக்கியதில், லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கிய கொளஞ்சி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.