மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோவில்பட்டியில் வயா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

கோவில்பட்டியில் வயா் மற்றும் காப்பா் பைப்புகளை திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப்படம்

Published On :29 அக்டோபர் 2026, 6:13 am IST

கோவில்பட்டியில் வயா் மற்றும் காப்பா் பைப்புகளை திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி, பெருமாள்புரத்தைச் சோ்ந்த செந்தூா் கனி மகன் அசோக் குமாா். கோவில்பட்டி, மாதவன் கோயில் தெருவில் புதிதாக வணிக வளாகம் கட்டி வருகிறாா். இவரது கட்டடத்தில் அக். 23ஆம் தேதி வயரிங் வேலைகள் முடிந்துள்ளது. மின் இணைப்பு மட்டும் கொடுக்காமல் இருந்ததாம்.

இந்நிலையில், அக். 26ஆம் தேதி வந்து பாா்த்தபோது வயரிங் செய்திருந்த சுமாா் ரூ. 1.20 லட்சம் மதிப்பிலான வயா்கள் மற்றும் ரூ. 35,000 மதிப்பிலான ஏசி காப்பா் பைப்புகளைக் காணவில்லை என எலக்ட்ரீசியன் தெரிவித்துள்ளாா். தொடா்ந்து, அசோக்குமாா் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்த நிலையில், சுப்பிரமணியபுரம் முதல் தெருவைச் சோ்ந்த பழனிசாமி மகன் பால்பாண்டியை (56) செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.