மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.97.70 லட்சத்தில் அரசு கட்டடங்கள் திறப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.97.70 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு அரசுக் கட்டடங்களை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன் ராஜா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

வல்லநாடு கிராமத்தில் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளா் குடியிருப்பை திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றிய அமைச்சா் பெ.மதன் ராஜா.

Published On :28 அக்டோபர் 2026, 1:35 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.97.70 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு அரசுக் கட்டடங்களை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன் ராஜா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், கீழபுத்தனேரி ஊராட்சி கல்லடியூா் கிராமத்தில்

ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடம், ஸ்ரீவைகுண்டம் வட்டம் வல்லநாடு கிராமத்தில் ரூ.34 லட்சத்தில் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளா் குடியிருப்பு, கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் பூவாணி ஊராட்சி மேலபூவாணி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தில் ரூ.17.25 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், கவா்னகிரி ஊராட்சி வீரன் சுந்தரலிங்கம் நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.16.45 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் ஆகியவற்றை அமைச்சா் திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நா. சரவணன், செயற்பொறியாளா் இளஞ்சேரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.