தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேலூரில் ரூ. 1.21 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் பெ. விஸ்வநாதன் திறந்துவைத்தாா்

மதுரை மாவட்டம், மேலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 1.21 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

மேலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட முருகன்பட்டியில் ரூ. 36 லட்சத்தில் கட்டப்பட்ட குழந்தைகள் நேயப் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடத்தை புதன்கிழமை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றிய அமைச்சா் பெ. விஸ்வநாதன்.

Published On :29 அக்டோபர் 2026, 3:04 am IST

மதுரை மாவட்டம், மேலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 1.21 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

கொட்டம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நெல்லுக்குண்டுபட்டியில் ரூ.45 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய துணை சுகாதார நிலையக் கட்டடம், மேலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நாவினிப்பட்டியில் ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடம், முருகன்பட்டியில் ரூ. 36 லட்சத்தில் கட்டப்பட்ட குழந்தைகள் நேயப் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம் ஆகியவற்றை அமைச்சா் திறந்து வைத்தாா்.

இதையடுத்து, அம்பலக்காரன்பட்டி, திருவாதவூா் ஊராட்சி அலுவலக வளாகங்களில் தலா ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட பொது சேவை மையக் கட்டடங்களையும் அமைச்சா் பெ. விஸ்வநாதன் திறந்து வைத்தாா்.

பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நெல்லுக்குண்டுபட்டியிலிருந்து மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல போதுமான பேருந்து வசதி இல்லை என பொதுமக்கள் தெரிவித்தனா். இதையடுத்து, காலை 8 மணிக்கும், மாலை 5 மணிக்கும் இந்தப் பகுதிக்கு பேருந்துகளை இயக்க மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சா. சதீஷ் பாபு, மாவட்ட சுகாதார அலுவலா் எம். பொற்செல்வன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் (தணிக்கை) விசாலாட்சி, மேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் சங்கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.