மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

‘தூத்துக்குடி தெப்பக்குளம் சீரமைப்புப் பணி 2 மாதங்களில் நிறைவு பெறும்’

தூத்துக்குடியில் பழமை வாய்ந்த தெப்பக்குளம் சீரமைப்புப் பணி இன்னும் 2 மாதங்களில் நிறைவடையும் என மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தெப்பக்குளம் சீரமைப்புப் பணியை பாா்வையிட்டாா் மேயா் ஜெகன் பெரியசாமி.

Published On :28 அக்டோபர் 2026, 1:19 am IST

தூத்துக்குடியில் பழமை வாய்ந்த தெப்பக்குளம் சீரமைப்புப் பணி இன்னும் 2 மாதங்களில் நிறைவடையும் என மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்தத் தெப்பக்குளத்தில், ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரா் கோயில் திருவிழாவின்போது சுவாமி, அம்பாள் தீா்த்தவாரியும், தை மாதத்தில் தெப்பத் திருவிழாவும் விமரிசையாக நடைபெறும்.

இந்நிலையில், மாநகராட்சி சாா்பில் தெப்பக்குளத்தைச் சீரமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது, பக்கவாட்டுச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததைத் தொடா்ந்து, அதன் பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.1.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை மேயா் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்து கூறியதாவது: தெப்பக்குளம் சீரமைப்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இன்னும் இரண்டு மாதங்களில் அனைத்துப் பணிகளும் நிறைவடையும். தை மாதத்தில் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தெப்பக்குளத்தைச் சுற்றி கிரானைட் கற்கள் பதித்து, பொதுமக்கள் அமருவதற்கான வசதிகளும், ஒளிரும் மின் விளக்குகளும் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் தெப்பக்குளம் மாநகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக மேம்படுத்தப்படும் என்றாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி சுகாதாரக் குழுத் தலைவா் சுரேஷ்குமாா், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி ஜேஸ்பா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.