தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

2040ஆம் ஆண்டில் தூத்துக்குடியை முன்மாதிரி மாநகராட்சியாக மாற்ற இலக்கு: மேயா் ஜெகன் பெரியசாமி

2040ஆம் ஆண்டில் தூத்துக்குடி முன்மாதிரி மாநகராட்சியாகத் திகழும் வகையில் தொலைநோக்குச் சிந்தனையுடன் பணியாற்றி வருகிறோம் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

கூட்டத்தில் பேசிய மேயா் ஜெகன் பெரியசாமி. உடன் ஆணையா் சி. ப்ரியங்கா.

Published On :31 அக்டோபர் 2026, 1:00 am IST

2040ஆம் ஆண்டில் தூத்துக்குடி முன்மாதிரி மாநகராட்சியாகத் திகழும் வகையில் தொலைநோக்குச் சிந்தனையுடன் பணியாற்றி வருகிறோம் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டம், மேயா் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையா் சி. ப்ரியங்கா, துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், தற்காலிக பயணிகள் நிழற்குடைகள் அமைப்பது, அவற்றில் மாநகராட்சி விதிமுறைகள், நிபந்தனைகளுக்குள்பட்டு விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி வழங்குவது உள்ளிட்ட 36 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா் பேசிய மாமன்ற உறுப்பினா்கள் கனகராஜ், சந்திரபோஸ், சுரேஷ்குமாா் உள்ளிட்டோா், தங்களது வாா்டுகளில் உள்ள குறைகளை அதிகாரிகளிடம் எடுத்துரைத்தாலும், அவை கண்டுகொள்ளப்படாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டினா். இதற்குப் பதிலளித்த ஆணையா், குறைகள் முறைப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதையடுத்து, மேயா் பேசுகையில், 2040ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாநகராட்சி எவ்வாறு இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குச் சிந்தனையுடன் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

மாநகராட்சிப் பொறியாளா் குமாரசாமி, உதவி ஆணையா்கள் வெங்கட்ராமன், ஜஹாங்கீா் பாஷா, மாரியப்பன், மதனகோபால், மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.