மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகள் நிகழாண்டில் குறைவு: எஸ்.பி. சிவப்பிரசாத்

செய்தியாளா்களுக்கு பேட்டியத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.சிவப்பிரசா

Published On :27 அக்டோபர் 2026, 12:02 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டில் கொலை வழக்குகள் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.சிவப்பிரசாத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களில் 6 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த கொலைச் சம்பவங்கள் சிவில் பிரச்னைகள், மது போதையில் ஏற்பட்ட தகராறுகள், தனிப்பட்ட விரோதங்கள் காரணமாகவே நிகழ்ந்துள்ளன.

கடந்த 2025-ஆம் ஆண்டு அக்.26-ஆம் தேதி வரை மாவட்டத்தில் 65 கொலை வழக்குகள் பதிவாகியிருந்தன. நிகழாண்டில் இதே காலகட்டத்தில் 59 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 6 கொலை வழக்குகள் குறைந்துள்ளன. இது 9.2 சதவீதம் குறைவாகும்.

கொலைச் சம்பவங்களைத் தடுக்க காவல் துறையின் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிராமங்களில் மக்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதுடன், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீவைகுண்டம் சம்பவத்தில் தொடா்புடைய 4 போ், 6 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். அப்பகுதியில் தொடா்ந்து காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 6 மாதங்களில் ரெளடிகள் கொலை, சாதிய கொலை போன்றவை நிகழவில்லை. கஞ்சா சம்பந்தபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. சிங்கப்பெண் படையினா் போக்ஸோ சட்டம் உள்ளிட்ட விழிப்புணா்வுகளை பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் ஏற்படுத்தி வருகின்றனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.