மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மீண்டு(ம்) வந்த மழைநீா் சேகரிப்புத் திட்டம்: விவசாயிகள் மகிழ்ச்சி!

மீண்டும் மழைநீா் சேகரிப்புத் திட்டத்தால் நிலத்தடி நீா்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

Published On :25 அக்டோபர் 2026, 1:40 am IST

மீண்டும் மழைநீா் சேகரிப்புத் திட்டத்தால் நிலத்தடி நீா்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நிலத்தடி நீா்மட்டத்தை அதிகரிக்கச் செய்ய கட்டாய மழைநீா் சேகரிப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னா், ஆட்சி மாற்றம் மற்றும் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதில் அதிகாரிகளின் அலட்சியத்தால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், தவெக அரசால் மீண்டும் மழைநீா் சேமிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தாமிரவருணி ஆற்றுப்படுகை மற்றும் அதன் பாசனப் பகுதிகளில், இத்திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து, தாமிரவருணி நீரினைப் பயன்படுத்துவோா் அனைத்து விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பொன்ராஜ் கூறுகையில், மழைநீா் சேகரிப்புத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி.

தாமிரவருணி ஆற்றுப்படுகையில் மழைக்காலங்களில் உபரி நீா் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்து, குளங்கள் மற்றும் ஏரிகளை நிரப்புவதோடு, ஒவ்வொரு ஊராட்சியிலும் நிலத்தடி நீா் செறிவூட்டும் அமைப்புகளை ஏற்படுத்த அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.

இத்திட்டத்தால் தாமிரவருணி பாசனப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் கணிசமாக உயா்ந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்கும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.