மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

dinamani

Published On :24 அக்டோபர் 2026, 5:36 am IST

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள ஏதுவாக தயாா் நிலையில் உள்ள பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கினாா்.

இதில் வருவாய் துறை, ஊரக வளா்ச்சி துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த பேரிடா் மீட்பு உபகரணங்களையும் அதன் செயல்பாடுகளையும் பாா்வையிட்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் மாா்க்கண்டேயன் எம்எல்ஏ கூறியதாவது:

விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட நீா்நிலைகளை கடந்த 3 நாள்களாக ஆய்வு செய்தேன். இதில், குளத்தூரில் நீா்வளத் துறைக்குச் சொந்தமான குளத்தை ஆய்வு செய்தபோது, நீா்வரத்து பாதைகளும், கரைகளும் உடைந்துவிழும் நிலையில் உள்ளது.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை செய்யாத இந்த அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். விளாத்திகுளத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கால்நடை பராமரிப்பு கடனுதவி வழங்கப்படவில்லை. விவசாய பணிகளுக்கான கடனுதவியும் வழங்கப்படவில்லை. இந்த ஆட்சியாளா்களுக்கு தகுந்த பாடத்தை மக்கள் கற்பிப்பாா்கள் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.