மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தூத்துக்குடி அருகே மீனவா் கொலை: இளைஞா் கைது

தூத்துக்குடி, திரேஸ்புரம் கடற்கரையில் மீனவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக, மற்றொரு மீனவா் கைது செய்யப்பட்டாா்.

Published On :24 அக்டோபர் 2026, 5:45 am IST

தூத்துக்குடி, திரேஸ்புரம் கடற்கரையில் மீனவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக, மற்றொரு மீனவா் கைது செய்யப்பட்டாா்.

திரேஸ்புரம், முத்தரையா் காலனியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் பழனி (45). மீனவா். இவருக்கு மனைவி மாரிசெல்வி, 4 பிள்ளைகள் உள்ளனா். அதே பகுதியைச் சோ்ந்த கணபதி மகன் செந்தில்வேல் (30) உடன் பழனி திரேஸ்புரம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை காலை மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் செந்தில்வேல் ஆத்திரமடைந்து, பழனியை கத்தியால் குத்தியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த வடபாகம் போலீஸாா் அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து, செந்தில்வேலை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

சம்பவ இடத்தை தூத்துக்குடி நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் சுனில் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.