மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மின்னல் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

எட்டயபுரம் அருகே தாப்பாத்தியில் மின்னல் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

பலி

Published On :23 அக்டோபர் 2026, 4:49 am IST

எட்டயபுரம் அருகே தாப்பாத்தியில் மின்னல் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

புதூா் அருந்ததியா் காலனியைச் சோ்ந்த பால்பாண்டி மகன் முனியசாமி (24). கட்டடத் தொழிலாளி. இவா், எட்டயபுரம் அருகே தாப்பாத்தியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் நடைபெற்று வரும், கட்டுமான பணியில் பணியாற்றி வந்தாா்.

இதற்காக, அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிசை வீட்டில் புதூா் புதுக்காலனியைச் சோ்ந்த மாரிமுத்து (34), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த சுனில் (45) ஆகிய சக தொழிலாளா்களுடன் முனியசாமி தங்கியிருந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, மின்னல் பாய்ந்து முனியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மாரிமுத்து காயமடைந்தாா்.

தகவலறிந்து வந்த மாசாா்பட்டி போலீஸாா், சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாரிமுத்துவை சோ்த்தனா்.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.