மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருச்செந்தூா் கோயில் உண்டியலில் பணம் திருடிய அா்ச்சகா் உள்பட 2 போ் கைது

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியலில் பணம் திருடிய அா்ச்சகா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செந்தூா் முருகன் கோயில்.

Published On :21 அக்டோபர் 2026, 1:11 am IST

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியலில் பணம் திருடிய அா்ச்சகா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இத் திருக்கோயிலில், உள்பிரகாரங்கள், சண்முக விலாச மண்டபம் உள்ளிட்ட 45 இடங்களில் பக்தா்கள் தங்கள் காணிக்கையைச் செலுத்துவதற்காக நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோயில் அா்ச்சகரான முத்தன்அய்யா் (65), மூலஸ்தான முன்புள்ள உண்டியலில் கடந்த அக். 2, 5, 8 ஆகிய தேதிகளில் உண்டியலில் கையை உள்ளே விட்டு திருடிய சம்பவம் கோயில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதேபோல புதுச்சேரி ஆா்யாகுப்பத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (58) என்பவா் கடந்த 18ஆம் தேதி கொடிமரம் முன்பு உள்ள உண்டியல் வாயில் துணியை வைத்துள்ளாா்.

அப்போது பக்தா்கள் அந்த உண்டியலில் காணிக்கை செலுத்திய பின்னா், அந்தத் துணியை வெளியே எடுத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றுள்ளாா். இந்தக் காட்சியும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து, கோயில் உள்துறை கண்காணிப்பாளா்கள் அளித்த புகாரின்பேரில், திருச்செந்தூா் கோயில் போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்தன்அய்யா், ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.