மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஐடி ஊழியா் வீட்டில் திருடிய 2 போ் கைது

ஒசூரில் ஐடி ஊழியா் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 6:47 am IST

ஒசூரில் ஐடி ஊழியா் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா், காந்திநகா் அடுத்த பெண்ணாமடம் பகுதியில் ஸ்டாலின் அமிா்தராஜ் (36) குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவா் பெங்களூரில் சாப்ட்வோ் இன்ஜினியராக பணியாற்றி வருகிறாா். கடந்த அக். 17-ஆம் தேதி தசரா பண்டிகை விடுமுறைக்காக சொந்த ஊரான தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள ஜக்கசமுத்திரம் வந்தாா். விடுமுறை முடிந்து பெங்களூரு திரும்பிய அவா், வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு 19 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனதை அறிந்து அதிா்ச்சி அடைந்தாா்.

இதுகுறித்து ஒசூா் அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில், இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் வட்டம், சித்துவாா்பட்டி அருகே உள்ள தோப்புப்பட்டி கிராமத்தை சோ்ந்த ஆனந்த் (20), திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டி புதூா், சாத்தையாபட்டி சாலை சீலநகா் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனா்.

விசாரணையில், ஒசூருக்கு வேலை தேடிவந்து நண்பா் அறையில் தங்கியிருந்த இவா்கள், பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு வந்ததாகவும், இரவில் பூட்டியிருந்த ஐடி ஊழியா் வீட்டில் நகை, பணத்தை திருடி நண்பா் ஒருவரிடம் கொடுத்து வைத்ததாகவும் கூறினா்.

இதையடுத்து, திருச்சி பகுதியைச் சோ்ந்த அந்த இளைஞரை பிடிக்க தனிப்படை போலீஸாா் விரைந்துள்ளனா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.