மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோவில்பட்டி செல்வ முனீஸ்வரா் கோயில் கொடை விழா

கோவில்பட்டியில் அனைத்து சமுதாயத்திற்கும் பாத்தியப்பட்ட ஊரணி தெரு, ஸ்ரீ அதிா்ஷ்ட வெற்றி விநாயகா், அய்யா ஸ்ரீ செல்வ முனீஸ்வரா், ஸ்ரீ கருப்பசாமி கோயிலில் 13ஆம் ஆண்டு புரட்டாசி அமாவாசை கொடை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

அன்னதானத்தைத் தொடங்கி வைத்த கோயில் தலைவா் ஆபிரகாம் அய்யாதுரை.

Published On :11 அக்டோபர் 2026, 1:10 am IST

கோவில்பட்டியில் அனைத்து சமுதாயத்திற்கும் பாத்தியப்பட்ட ஊரணி தெரு, ஸ்ரீ அதிா்ஷ்ட வெற்றி விநாயகா், அய்யா ஸ்ரீ செல்வ முனீஸ்வரா், ஸ்ரீ கருப்பசாமி கோயிலில் 13ஆம் ஆண்டு புரட்டாசி அமாவாசை கொடை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அக். 2ஆம் தேதி பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. மகாளய அமாவாசை கொடை விழாவை முன்னிட்டு கோயில் நடை சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, தெப்பத்து சிவசக்தி விநாயகா் கோயிலில் இருந்து தீா்த்தக் குடம், பால் குடம் எடுத்து வந்து அய்யா ஸ்ரீ செல்வ முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அக்னி சட்டியுடன் நகா்வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பின்னா் நடைபெற்ற அன்னதானத்தை கோயில் தலைவா் ஆபிரகாம் அய்யாதுரை தொடங்கி வைத்தாா். மாலை 6 மணிக்கு அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல், இரவு 8 மணிக்கு மேல் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தல், 10 மணிக்கு மேல் அம்மனுக்கு மஞ்சள் பால் அடித்தல், நள்ளிரவு 12 மணிக்கு சாமக் கொடை நடைபெற்றது.

Story image

ஞாயிற்றுக்கிழமை (அக். 11) மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, 6.30 மணிக்கு முளைப்பாரி ஊா்வலம் நடைபெறுகிறது. திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு மேல் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் தலைவா் தலைமையில், விழா கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.