தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கூட்டப்பனை கோயில் கொடை விழா பிரச்னை: தா்னாவில் ஈடுபட்ட 32 போ் கைது

திசையன்விளை வட்டாட்சியா் அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்டோா்.

Published On :27 அக்டோபர் 2026, 2:50 am IST

திருநெல்வேலி மாவட்டம், கூட்டப்பனை அருகே மாரியம்மன் கோயில் கொடை விழா நடத்துவது தொடா்பாக, திசையன்விளை வட்டாட்சியா் அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 32 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கூட்டப்பனை, மாரியம்மன் நகரில் உள்ள மாரியம்மன் கோயில், ஒரு சமுதாயத்தினரின் குடும்பக் கோயில் எனக் கூறப்படுகிறது. அந்த குடும்பத்தினா் 7 மாதங்களுக்கு முன்பு கொடை விழா நடத்தினராம்.

இந்நிலையில், அதே ஊரைச் சோ்ந்த மற்றொரு சமுதாயத்தினா் தங்கள் தரப்பில் கோயில் கொடை விழாவை அக். 26, 27ஆம் தேதிகளில் நடத்துவதற்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் உத்தரவு பெற்றுள்ளனா். ஆனால், கோயிலைப் பராமரிக்கும் சமுதாயத்தினா் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கோயிலைப் பூட்டி சாவியைத் தர மறுத்து வருகின்றனா்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி கொடை விழா நடத்த அனுமதிக்கக் கோரி, ஒரு சமுதாயத்தினா் 2 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். எனினும், கொடை விழா நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.

இதையடுத்து, ஒரு சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் திசையன்விளை வட்டாட்சியா் அலுவலகம் முன் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். அவா்களிடம் வட்டாட்சியா் ரமேஷ் சாா்பில் வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போதும் அவா்கள் போராட்டத்தைக் கைவிடாததால், உவரி காவல் நிலைய ஆய்வாளா் பிரேமா தலைமையிலான போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 32 பேரைக் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனா். மாலையில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.