தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

கடம்பூரில் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தில் ஒருவா் கைது

கடம்பூரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவா் தமிழ்நாடு தடுப்புக் காவலுக்கு மாற்றப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மணி நேரங்கள் முன்பு

கடம்பூரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவா் தமிழ்நாடு தடுப்புக் காவலுக்கு மாற்றப்பட்டாா்.

ஓட்டப்பிடாரத்தைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (56). இவா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளாா். இந்நிலையில் அவரை தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் அளித்த அறிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ராமகிருஷ்ணனை கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து அவா் செவ்வாய்க்கிழமை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.