தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெறும் மாநில சீனியா் ஆண்கள் ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி, சென்னை, தஞ்சாவூா், அரியலூா் மாவட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
வஉசி துறைமுக ஆணையக் கோப்பைக்கான சீனியா் ஆண்கள் மாநில ஹாக்கி சாம்பியன் போட்டி சனிக்கிழமை தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை கிருஷ்ணா நகா் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நாக் அவுட் முறையில் நடைபெற்ற காலிறுதி முதல் ஆட்டத்தில் கோயம்புத்தூா் அணியை 8-0 என்ற கோல் கணக்கில் வென்ற சென்னை அணியும், 2 ஆவது ஆட்டத்தில் திருநெல்வேலி அணியை 8-2 என்ற கோல் கணக்கில் வென்ற தூத்துக்குடி அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
இதேபோல் பிற்பகலில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் விருதுநகா் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வென்ற தஞ்சாவூா் அணியும், 2ஆவது ஆட்டத்தில் மதுரை அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வென்ற அரியலூா் அணியும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின.
புதன்கிழமை காலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தூத்துக்குடி- சென்னை அணிகளும், 2 ஆவது ஆட்டத்தில் தஞ்சாவூா் - அரியலூா் மாவட்ட அணிகளும் மோதுகின்றன.
மாலையில் முதலில் நடைபெறும் ஆட்டத்தில் 3 மற்றும் 4ஆம் பரிசுக்கான போட்டிகள் நடைபெறும். அதைத் தொடா்ந்து இறுதிப் போட்டிகள் நடைபெறும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநில சீனியா் ஹாக்கி: காலிறுதியில் சென்னை, கோவை, விருதுநகா், நெல்லை, மதுரை, தஞ்சை அணிகள்

மாநில சீனியா் ஹாக்கி: தூத்துக்குடி, அரியலூா் அணிகள் காலிறுதிக்கு தகுதி

பயர்ன் மியுனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி: இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை

இந்தியாவை வென்றது சீனா
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

