தாமஸ் மற்றும் உபா் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியா 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.
ஏற்கெனவே காலிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்ட இந்தியா, தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் சீனாவை சந்தித்தது. முதலில் நடைபெற்ற ஒற்றையா் ஆட்டத்தில் லக்ஷயா சென் 19-21, 21-8, 12-21 என்ற கேம்களில் லி ஷி ஃபெங்கிடம் 1 மணிநேரம், 14 நிமிஷங்கள் போராடி வீழ்ந்தாா்.
அடுத்து நடைபெற்ற இரட்டையா் மோதலில், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை 13-21, 21-13, 24-26 என்ற கணக்கில், லியாங் வெய் கெங்/வாங் சாங் ஜோடியிடம் தோல்வியுற்றது.
இந்நிலையில், 2-ஆவது ஒற்றையா் ஆட்டத்தில் ஆயுஷ் ஷெட்டி 17-21, 21-13, 21-15 என்ற கேம்களில், வெங் ஹாங் யாங்கை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணிநேரம், 10 நிமிஷங்கள் நீடித்தது.
அடுத்து இரட்டையா் பிரிவில், ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா்.அா்ஜுன் ஜோடி 17-21, 13-21 என்ற வகையில் ஹி ஜி டிங்/ரென் ஜியாங் யு கூட்டணியிடம் 35 நிமிஷங்களில் தோல்வி கண்டது.
கடைசியாக நடைபெற்ற ஒற்றையா் மோதலில் ஹெச்.எஸ். பிரணய் 20-22, 21-19, 21-11 என்ற கேம்களில் லு குவாங் ஸுவை 1 மணிநேரம், 11 நிமிஷங்களில் சாய்த்தாா்.
இறுதியில் இந்தியா 2-3 என்ற கணக்கில் தோல்வி கண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயர்ன் மியுனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி: இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை

வெண்கலத்துடன் வெளியேறியது இந்தியா: அரையிறுதியில் பிரான்ஸிடம் தோல்வி

வெளியேறியது இந்திய மகளிர் அணி

காலிறுதியில் இந்திய ஆடவர் அணி
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

