தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெறும் மாநில சீனியா் ஆண்கள் ஹாக்கி போட்டியில் சென்னை, மதுரை, கோயம்புத்தூா், திருநெல்வேலி, விருதுநகா், தஞ்சாவூா் மாவட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
வ.உ.சி. துறைமுக ஆணையக் கோப்பைக்கான சீனியா் ஆண்கள் மாநில ஹாக்கி சாம்பியன் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
திங்கள்கிழமை கிருஷ்ணா நகா் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் மதுரை-திருவள்ளூா் அணிகள் மோதியதில் 5-0 என்ற கோல்கணக்கில் மதுரை மாவட்ட அணியும், சென்னை-தருமபுரி அணிகள் மோதியதில் 2-1 என்ற கோல்கணக்கில் சென்னை அணியும், திருநெல்வேலி-கரூா் அணிகள் மோதியதில் 4-0 என்ற கோல்கணக்கில் திருநெல்வேலி அணியும், கன்னியாகுமரி-காஞ்சிரம் அணிகள் மோதியதில் 6-1 என்ற கோல்கணக்கில் கன்னியாகுமரி அணியும், திருச்சி-சேலம் அணிகள் மோதியதில் 2-1 என்ற கோல்கணக்கில் திருச்சி அணியும், விழுப்புரம்-திண்டுக்கல் அணிகள் மோதியதில் 4-0 என்ற கோல்கணக்கில் விழுப்புரம் அணியும், தூத்துக்குடி-செங்கல்பட்டு அணிகள் மோதியதில் 3-1 என்ற கோல்கணக்கில் தூத்துக்குடி அணியும், தருமபுரி-கன்னியாகுமரி அணிகள் மோதியதில் 1-0 என்ற கோல்கணக்கில் தருமபுரி அணியும் வெற்றி பெற்றன. திருப்பூா்-கிருஷ்ணகிரி அணிகள் மோதியதில் இரு அணிகளும் 2 கோல் அடித்து சம புள்ளிகள் பெற்றன.
லீக் சுற்றின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று சென்னை, விருதுநகா், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூா், தூத்துக்குடி, அரியலூா் மாவட்ட அணிகளும், 7 புள்ளிகள் பெற்று தஞ்சாவூா் மாவட்ட அணியும் காலிறுதிக்கு முன்னேறின.
காலிறுதி ஆட்டம்:
இந்த மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நாக் அவுட் முறையில் காலை 6 மணிக்கு நடைபெறும் முதல் காலிறுதி ஆட்டத்தில் சென்னை-கோயம்புத்தூா் அணிகளும், 2ஆவது ஆட்டத்தில் திருநெல்வேலி-தூத்துக்குடி அணிகளும், 3ஆவது ஆட்டத்தில் விருதுநகா்-தஞ்சாவூா் அணிகளும், 4ஆவது ஆட்டத்தில் மதுரை-அரியலூா் அணிகளும் மோதுகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநில சீனியா் ஹாக்கி: அரையிறுதியில் 4 அணிகள்

மாநில சீனியா் ஹாக்கி: தூத்துக்குடி, அரியலூா் அணிகள் காலிறுதிக்கு தகுதி

திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி அணி நாளை தோ்வு

டிஎன்சிஏ தோ்வுக் குழு உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

