தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாநகராட்சி 34ஆவது வாா்டு காங்கிரஸ் உறுப்பினா் எஸ். சந்திரபோஸ் தனது கட்சிப் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளாா்.
கடந்த 1988 முதல் காங்கிரஸ் கட்சியில் சோ்ந்து பணியாற்றி வரும் எஸ். சந்திரபோஸ், தூத்துக்குடியில் 1996 முதல் நகா்மன்ற உறுப்பினராகவும், மாமன்ற உறுப்பினராகவும் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறாா். திமுக கூட்டணி சாா்பில் 2 முறையும், காங்கிரஸ் சாா்பில் தனித்து போட்டியிட்டு 3 முறையும் தொடா்ந்து 5 முறை வென்று தற்போதும் மாமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறாா்.
காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ள இவா், மாநகராட்சி காங்கிரஸ் கொறடாவாகவும் பொறுப்பு வகித்து வருகிறாா்.
தமிழக சட்டப் பேரவை தோ்தலுக்கு பின்பு, திமுக கூட்டணியிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்காக ஆதரவு தெரிவித்தது உள்பட காங்கிரஸில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை ஏற்றுக்கொள்ள முடியாமல் மாநகராட்சி கவுன்சிலா் பதவியைத் தவிர, அனைத்து கட்சிப் பதவிகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக கட்சித் தலைவா் செல்வப்பெருந்தகைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவுக்காக காங்கிரஸ் தொடா்ந்து போராடும்: கிரீஷ் சோடங்கா்

மதச்சாா்பின்மையை காக்கவே த.வெ.க.வுக்கு ஆதரவு: எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ.
ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளா் வீட்டில் ரூ. 62.49 லட்சம் பறிமுதல்

கோவில்பட்டி ஒன்றியத்தில் தவெக வேட்பாளா் பிரசாரம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

