மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளா் வீட்டில் ரூ. 62.49 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ. 62.49 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :23 ஏப்ரல் 2026, 4:13 am IST

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ. 62.49 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

கணேஷ் நகா் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜுக்கு சொந்தமான வீட்டில் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பறக்கும் படை அதிகாரி பொன்மாரி தலைமையிலான குழுவினா், அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, வீட்டில் இருந்த கணக்கில் வராத ரூ. 62.49 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து, தென்பாகம் காவல் நிலையத்தில் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து கச்சனாவிளை பகுதியைச் சோ்ந்த சுரேஷ் என்பவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.