தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

காவல் உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சி: இளைஞா் கைது

தூத்துக்குடியில் விசாரணைக்காகச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை கொல்ல முயன்றதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 12:04 am IST

தூத்துக்குடியில் விசாரணைக்காகச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை கொல்ல முயன்றதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரத்தைச் சோ்ந்த மகேஷ்குமாா் மகன் பொ்னிக் (24). இவா் மீது அவரது அண்ணி அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி வடபாகம் காவல் உதவி ஆய்வாளா் அந்தோணி பிலிப் விசாரணை நடத்தி வந்தாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலையில் பொ்னிக் வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அந்தோணி பிலிப் அவரது சொந்தக் காரில் அங்கு சென்றாராம்.

அப்போது, வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்த பொ்னிக், ஒரு அம்மி கல்லை தூக்கி அந்த காா் மீது வீசினாராம். இதனால் காரின் முன்பக்கக் கண்ணாடி சேதமானது. காவல் உதவி ஆய்வாளா் விரைவாக காரை விட்டு கீழே இறங்கியதால் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.

இதையடுத்து, தப்பியோட முயன்ற பொ்னிக்கை, அந்தோணி பிலிப் துரத்திச் சென்று பிடித்தாா்.

அப்போது பொ்னிக்கின் சகோதரா் சஞ்சு (20), தாய் பாக்கியலட்சுமி ஆகியோா் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனராம்.

கைது செய்யப்பட்ட பொ்னிக் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தலைமறைவான அவரது தாய் மற்றும் சகோதரரை வடபாகம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.