மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தமாகா கோரிக்கை

News image

கோவில்பட்டி நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

கோவில்பட்டியில் விபத்துகளை தடுக்க சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென தமாகா வடக்கு மாவட்ட தலைவா் என்.பி. ராஜகோபால் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினா் கி. வைரம், மாவட்ட துணைத் தலைவா்கள் பி. முத்துசாமி, கே. திருமுருகன், கோமதி சங்கா் உள்ளிட்டோா் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் ரத்தினபாபுவிடம் கோரிக்கை மனு வழங்கினா்.

மனு விவரம் : கோவில்பட்டி நகா், சுற்றுவட்டாரப் பகுதியில் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறைக்கு உள்பட்ட சாலைகளில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 60 அடி சாலைகள் 20 அடியாக குறைந்து விட்டன. ஆக்கிரமிப்புகள் காரணமாக தினமும் கோவில்பட்டி நகரமே போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே, சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகாத வகையில் கண்காணிப்பு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற காலம் தாழ்த்தினால் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.