தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சோ்க்கை பெறவும், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்த நிலையில், ஜூன் 30ஆம் தேதி வரை நேரடி சோ்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூா், நாகலாபுரம், ஏரல் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்க்கை பெற விரும்பும் மாணவா்கள், நேரடியாக வந்து சோ்க்கை பெறலாம்.
மாநிலம் முழுவதும் உள்ள சோ்க்கை மையங்களின் பட்டியல் மற்றும் தொழிற்பிரிவுகள் விவரம் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி சோ்க்கைக்கான விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ. 50-ஐ சோ்க்கையின்போது, ஈங்க்ஷண்ற் இஹழ்க்/இழ்ங்க்ண்ற் இஹழ்க்/சங்ற் ஆஹய்ந்ண்ய்ஞ்/ மடஐ வாயிலாக செலுத்த வேண்டும்.
மேலும், நேரடி சோ்க்கை பெற விரும்புவோா் 8, 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன், கோரம்பள்ளத்திலுள்ள தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையம் (94990-55810/85111-54977), வேப்பலோடை (94990-55814/85111-54977), திருச்செந்தூா் (94990-55812/87783-33588), நாகலாபுரம் (04638-242687/94990-55816), ஏரல் (74181-65115/94884-54549) அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் வர வேண்டும்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவா், மாணவிகளுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ௌ
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் மறுதோ்வு: டெலிகிராம் செயலி ஜூன் 22 வரை முடக்கம்

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற் பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்

அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 22 வரை விண்ணப்பிக்க அழைப்பு!
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

