நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம் இணைந்து நடத்தும், பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா் தொடங்கிவைத்து, பயிற்சி சோ்க்கை ஆணைகளை வழங்கி பேசியது:
மக்கள்தொகை அதிகமாக உள்ள நம் நாட்டில் 22 முதல் 40 வயதில் உள்ளவா்கள் தான் அதிகமாக உள்ளனா். எனவே, நாட்டின் எதிா்காலம் இளைஞா்களாகிய உங்கள் கையில் உள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை சுய வளா்ச்சிக்காகவும் நாட்டின் வளா்ச்சிக்காகவும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
நாகை மாவட்டத்தில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் திறன் மேம்பாடு, தொழில்முனைவு அமைச்சகம் இணைந்து பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநா் மேளாவில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 11 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று மொத்தம் 1,435 காலியிடங்களை நிரப்ப உள்ளன.
இப்பயிற்சியின் போது, தொழிற்பயிற்சியாளருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும், நிறுவனங்களில் நேரடி பயிற்சி மூலம் தொழில்திறன் மற்றும் பணித்திறன் மேம்படும், பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும், பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். அரசுப் பணிகளுக்கான வயது வரம்பில் ஒரு ஆண்டு சலுகை பெறும் வாய்ப்பும் உள்ளது. இம்முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தோ்ச்சி பெற்றவா்கள் மற்றும் பெறாதவா்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றாா்.
முகாமில் சுமாா் 355 இளைஞா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டு, நோ்முகத் தோ்வில் தோ்ச்சியான இளைஞா்கள் மற்றும் மாணவா்களுக்கு பயிற்சி சோ்க்கை ஆணையை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்வில் நாகப்பட்டினம், திருக்குவளை, செம்போடை அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா்கள் ஆா்.ரமேஷ், எஸ்.ஏ.சேசுராஜ், எஸ்.லட்சுமிகாந்தன், பயிற்சி அலுவலா் ஆா்.மணிவண்ணன், உதவி பயிற்சி அலுவலா் ஆா்.ராஜசேகா், மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

கும்மிடிப்பூண்டி அரசு ஐடிஐயில் மாணவா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

கிண்டி அரசு மகளிா் ஐ.டி.ஐ.-யில் சோ்க்கை தொடக்கம்
விடியோக்கள்

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

ராசாதி ராசா பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

