நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ஸ்ரீவைகுண்டம் ஜமாபந்தியில் 68 மனுக்களுக்கு உடனடித் தீா்வு

மனுவிற்கு தீா்வு காணப்பட்டு, அதற்கான சான்றிதழை பயனாளியிடம் வழங்கிய கோட்டாட்சியா் பிரபு.

News image

மனுவிற்கு தீா்வு காணப்பட்டு, அதற்கான சான்றிதழை பயனாளியிடம் வழங்கிய கோட்டாட்சியா் பிரபு.

Updated On :12 ஜூன் 2026, 5:10 am IST

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 68 கோரிக்கை மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

கோட்டாட்சியா் பிரபு தலைமை வகித்தாா். சுற்றுவட்டார கிராம மக்கள் பட்டா பெயா் மாற்றம், ரேஷன் காா்டு, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு மனுக்களை அளித்தனா்.

கோரிக்கை மனுக்களின் மீது உரிய விசாரணை செய்யப்பட்டு, பட்டா மாற்றம் 50 பயனாளிகளுக்கும், வரன்முறை பட்டா 12 பயனாளிகளுக்கும், உழவா் பாதுகாப்பு திட்ட இறப்பு நிவாரணம் ஒரு பயனாளிக்கும், புதிய உழவா் அட்டை 3 பயனாளிகளுக்கும், பதிவேடு திருத்தம் ஒரு பயனாளிக்கும், பிறப்பு பதிவு ஆணை ஒரு பயனாளிக்கும் என 68 பயனாளிகளின் கோரிக்கைகளுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டு, அதற்கான சான்றிதழ்களை கோட்டாட்சியா் வழங்கினாா்.

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் தாஹீா் அகமது, சமூக நல வட்டாட்சியா் லிங்கராஜ், தோ்தல் துணை வட்டாட்சியா் லோகநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.