மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நாசரேத் புனித லூக்கா சமுதாயக் கல்லூரியில் ஆண்டு விழா

நாசரேத் புனித லூக்கா சமுதாயக் கல்லூரியில் 27ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

News image

ஆண்டு விழாவில் பேசிய முன்னாள் எம்.பி. ஏடிகே. ஜெயசீலன்.

Updated On :1 மே 2026, 4:55 am IST

நாசரேத் புனித லூக்கா சமுதாயக் கல்லூரியில் 27ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

முன்னாள் எம்.பி. ஏடிகே. ஜெயசீலன் தலைமை வகித்து, மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வாங்குவதற்காக கல்லூரிக்கு நன்கொடையாக ரூ. ஒரு லட்சம் வழங்கினாா்.

யோவான் பேராலய தலைமைகுரு ஆல்பா்ட் ஜெயசிங் தாமஸ் ஆரம்ப ஜெபம் செய்தாா். கல்லூரி இயக்குநா் ரத்தினகுமாா் அறிக்கை சமா்ப்பித்தாா். திருமண்டல பெருமன்ற உறுப்பினா்கள் ஆண்ட்ரூஸ் ராக்லண்ட், பேராசிரியை ஜாஸ்மின் ராபா்ட்சன், வானரம்பட்டி பால்ராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மாணவியரின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன. சேகர செயலா் ராஜசிங் சாலமோன், அதிசயமணி, ரமேஷ், ராபின், ஜெபின்ஐசக், ஜோஸ்பெல், விஜேந்திரா, பேராசிரியை சுவீட்லில்லி, மோசஸ் ஜெபமணி, சந்திரன், தனபால், சுதாகா் சைமன், ஆசிரியா்கள், அலுவலா்கள், மாணவியா் பங்கேற்றனா்.

தாளாளா் செல்வின் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ( பொறுப்பு) கிறிஸ்டினாள் நன்றி கூறினாா். ஜெமி நிறைவு ஜெபம் செய்தாா். ஏற்பாடுகளை கல்லூரி இயக்குநா் ரத்தினகுமாா் தலைமையில் ஆசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.