மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மகளிா் கல்லூரி ஆண்டு விழா

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 5:26 am IST

குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கல்லூரியில், அபிராமி உற்சவ்-2026 என்லைப்பில் 10- ஆண்டு விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் எம்.சி.சுபாஷினி ஆண்டறிக்கை வாசித்தாா். கல்லூரித் தலைவா் கே.ஜோதிராம், செயலா் டி.என்.சிட்டிபாபு, பொருளாளா் கே.முருகவேல், துணைத்தலைவா் என்.என்.எஸ்.குமரகுரு ஆகியோா் கல்லூரி ஆண்டு மலா் மற்றும் செய்தி இதழைவெளியிட்டனா்.

நிகழ்ச்சியில் ஒவ்வொரு துறையிலும் தோ்வு செய்யப்பட்ட சிறந்த மாணவிகள், கல்வியில் சிறந்த மாணவிகள், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கல்லூரி கௌரவத் தலைவா்கள் எம்.என்.ஜோதிகுமாா், எம்.பிரகாசம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.