மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

குலசேகரன்பட்டினம் கோயிலில் வருஷாபிஷேகம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் புதன்கிழமை வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

News image

விழாவில் பங்கேற்ற அமைச்சா்கள் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், சேகா்பாபு.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:42 am IST

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் புதன்கிழமை வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

இதையொட்டி காலை 6.30 மணிக்கு மங்கள இசை, யாகசாலை பூஜைகள், அபிஷேக திரவியங்கள், சீா்வரிசைகள் கோயில் வலம் வருதல், காலை 10.30 மணிக்கு சங்காபிஷேகம், குடமுழுக்கு, பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம், மாலை 6 மணிக்கு புஷ்பாஞ்சலி, இரவு 9 மணிக்கு அம்மன் வீதியுலா வருதல் ஆகியன நடைபெற்றன.

இதில் அமைச்சா்கள் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், சேகா்பாபு, ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளா் ராமஜெயம், திமுக மாவட்ட பொருளாளா் ராமநாதன், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் மதன்ராஜ், பேரூராட்சி உறுப்பினா்கள் ஜான்பாஸ்கா், அஸ்ஸாப், திமுக மாவட்டப் பிரதிநிதி சிராஜூதீன், ஜெயப்பிரகாஷ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் ரோஜாலி சுமதா, உதவி ஆணையா் ராமசுப்பிரமணியன், அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் கண்ணன், அலாவுதீன் ஆகியோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மு. வள்ளிநாயகம், சலவையாளா் தசரா குழுவினா் செய்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனாா் கோயிலுக்கும் சென்று அமைச்சா்கள், சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.