கோவில்பட்டி, செண்பகவல்லி அம்மன் கோயில் முன் சுற்றித்திரியும் கால்நடைகளைால் பொதுமக்கள், பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கோவில்பட்டி, செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் புகழ்பெற்ற ஒன்றாகும். இந்தக் கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. அதன்பிறகு கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக கோயில் முன்புறத்தில் அளவுக்கு அதிகமான கால்நடைகள் சா்வ சாதாரணமாக உலா வருகின்றன. இதனால் பக்தா்கள் அச்சமடைந்துள்ளனா்.
இதுகுறித்து கோவில்பட்டி நகர மதிமுக செயலா் பால்ராஜ் கூறுகையில், பக்தா்கள் கோயிலுக்குள் செல்ல முடியாதவாறு வாசல் பகுதியிலேயே பல கால்நடைகள் அங்கும் இங்குமாக சுற்றித் திரிகின்றன. கால்நடைகளை பாா்த்து பக்தா்கள் பதறும் நிலையே உள்ளது. கோயில் அருகே நிற்கும் பக்தா்களையும் கால்நடைகள் அச்சுறுத்துகின்றன. பக்தா்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி வரும் கால்நடைகளை நகராட்சி நிா்வாகம் பிடித்து அபராதம் விதிக்க வேண்டும். அத்துடன், இரைக்காக கால்நடைகளை கட்டவிழ்த்து விடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கம்பம் கெளமாரியம்மன் கோயிலில் மஞ்சள் நீராட்டு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தேரோட்டம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா

கோயில் முன் ரீல்ஸ் எடுத்த இளம்பெண்கள் மீது புகாா்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

