திருச்செந்தூா் தொகுதி பாஜக வேட்பாளா் கே. ஆா். எம். ராதாகிருஷ்ணன் தனது இறுதிக் கட்ட தோ்தல் பிரசாரத்தை காயல்பட்டினத்தில் நிறைவு செய்தாா்.
அவா் தனது, இறுதிக் கட்ட பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை காயல்பட்டினம் நகராட்சி அழகாபுரியில் இருந்து தொடங்கி லட்சுமி புரம், கீழ லட்சுமி புரம், ரத்தினாபுரி, மங்கள விநாயகா் கோயில் தெரு, உச்சினிமாகாளி அம்மன் கோயில் தெரு சிவன் கோயில் தெரு, வடக்கு முத்தாரம்மன் கோயில் தெரு, சேது ராஜா தெரு, கோமான் தெரு அருணாச்சலபுரம் கொம்புத்துறை சிங்கித்துறை, தேங்காய் பண்டகசாலை, மங்களவாடி வீரசடைச்சி அம்மன் கோயில் தெரு, மன்னா் ராஜா கோயில் தெரு, பூந்தோட்டம், தைக்கா புரம், ஒடக்கரை புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.
காயல்பட்டினம் அதிமுக நகரச் செயலா் யாசின், பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு செயலா் பூபதி பாண்டியன், இளைஞரணி செயற்குழு உறுப்பினா் விக்னேஷ், நகரத் தலைவா்கள் ஆறுமுகனேரி தங்க கண்ணன், அதிமுக திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் பூந்தோட்டம் மனோகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உடன்குடி ஒன்றியத்தில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ராதாபுரம் பகுதியில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

களியக்காவிளை பேரூராட்சியில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

