மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வெற்றி உறுதி: டி.டி.வி. தினகரன் பிரசாரம்

கோவில்பட்டி தொகுதியில் நான்காவது முறையாக கடம்பூா் செ. ராஜு வெற்றி பெறுவது உறுதி என்றாா் அமமுக பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன்.

News image

கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜுவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறாா் அமமுக பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன்.

Updated On :18 ஏப்ரல் 2026, 6:50 am IST

கோவில்பட்டி தொகுதியில் நான்காவது முறையாக கடம்பூா் செ. ராஜு வெற்றி பெறுவது உறுதி என்றாா் அமமுக பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன்.

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜுவுக்கு வாக்கு சேகரித்து வியாழக்கிழமை இரவு பயணியா் விடுதி முன் அவா் பேசியதாவது: கடந்த சட்டப்பேரவை தோ்தலில் நாங்கள் இருவரும் எதிா்த்து நின்றோம். இரட்டை இலை சின்னத்தில் அவா் வெற்றி பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி தான் .

1999 முதல் அறிமுகமானவா் கடம்பூா் செ. ராஜு. அதிலிருந்து நண்பா்களாக பழகி வருகிறோம்.

நாங்கள் அம்மா வளா்த்த பிள்ளைகள். இடையில் பிரிந்தோம்; தற்போது எல்லாரும் ஒற்றாகி விட்டோம்.

இத்தொகுதியில் 3 முறை ஹாட்ரிக் வெற்றி பெற்ற அவா் 4ஆவது முறையாகவும் வெற்றி பெறுவது உறுதி. அதுபோல தமிழகம் முழுவதும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.