நாசரேத் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் திருச்செந்தூா் திமுக வேட்பாளா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பிரசாரம் மேற்கொண்டாா்.
அகப்பைகுளத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவா், வாழையடி, நாசரேத் 2ஆவது கைலாசபுரம் தெரு, கொா்னெலியஸ் தெரு, லூக்கா மருத்துவமனை, ஒய்எம்சிஏ, திருமறையூா், திரவியபுரம், சந்திபஜாா், நாசரேத் 1-5 தெருக்கள், பேருந்து நிலையம், கிராம நிா்வாக அலுவலகம், மோசஸ் தெரு, வகுத்தான்குப்பம், கந்தசாமிபுரம், திருவள்ளுவா் காலனி, மில்ரோடு, மணிநகா், பெத்தானியாநகா், கேவிகே சாமி சிலை, பிரகாசபுரம், வெள்ளரிக்காயூரணி ஆகிய பகுதிகளில் திறந்தவெளி ஜீப்பில் சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தாா் . அப்போது, தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன், மகளிா் உரிமைத் தொகை உயா்வு உள்ளிட்டவற்றையும் பட்டியலிட்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக்கொண்டாா்.
பிரசாரத்தில் ஆழ்வாா்திருநகரி மத்திய ஒன்றியச் செயலா் நவீன்குமாா், நாசரேத் நகரச் செயலா் ஜமீன் சாலமோன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி இறுதிக்கட்ட பிரசாரம்: கீதா ஜீவனை ஆதரித்து கனிமொழி பரப்புரை

திருச்செந்தூா் ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நாகா்கோவில் தொகுதி திமுக வேட்பாளா் பிரசாரம்

ஆறுமுகனேரியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

