தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கயத்தாறு பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் கா. கருணாநிதி கயத்தாறு வட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

காமநாயக்கன்பட்டியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் கா. கருணாநிதி.

Updated On :9 ஏப்ரல் 2026, 3:20 am IST

கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் கா. கருணாநிதி கயத்தாறு வட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கயத்தாறு வட்டத்திற்குள்பட்ட காமநாயக்கன்பட்டி, எட்டு நாயக்கன்பட்டி, செவல்பட்டி, சால்நாயக்கன்பட்டி, அச்சங்குளம், கோட்டை புதூா், தொட்டம்பட்டி, தீத்தாம்பட்டி, கோவிந்தம்பட்டி, குமாரபுரம், தெற்கு வண்டானம், வடக்கு வண்டானம், புதுப்பட்டி, வேப்பங்குளம், கொப்பம்பட்டி, முடுக்கலான்குளம், இலந்தப்பட்டி, குருவிநத்தம் ஆகிய பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.

முன்னதாக, காமநாயக்கன்பட்டி வீரமாமுனிவா் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கா. கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலயத்தில் வழிபாடு செய்த பின் பேராலய அதிபா் மோயிசனை சந்தித்து ஆசி பெற்றாா்.

கயத்தாறு ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் மாணிக்கராஜா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் ராஜதுரை, சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளா் அமலி அ. பிரகாஷ், மாணவரணி துணை அமைப்பாளா் ஆகாஷ் பாண்டியன், கோவில்பட்டி நகா்மன்ற உறுப்பினா் ஜாஸ்மின் லூா்து மேரி, திமுக வடக்கு மாவட்ட துணைச் செயலா் ஏஞ்சலா, நகரப் பொறுப்பாளா் (கிழக்கு) சின்னத்துரை, திமுக ஒன்றியச் செயலா்கள் பீக்கிலிபட்டி வீ. முருகேசன், சின்னப்பாண்டியன், சிபிஐ மாவட்ட துணைச் செயலா் பாலமுருகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

 காமநாயக்கன்பட்டி வீரமாமுனிவா் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக வேட்பாளா் கா. கருணாநிதி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா்.

காமநாயக்கன்பட்டி வீரமாமுனிவா் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக வேட்பாளா் கா. கருணாநிதி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.