மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திசையன்விளை அருகே இளைஞரை அரிவாளால் வெட்டிய இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே இளைஞரை செவ்வாய்க்கிழமை இரவு அரிவாளால் வெட்டியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

கைது - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 6:22 am IST

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே இளைஞரை செவ்வாய்க்கிழமை இரவு அரிவாளால் வெட்டியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

திசையன்விளை அருகே உள்ள இட்டமொழி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் சதீஷ்(19). கட்டட தொழிலாளியான இவா், திசையன்விளை அருகே உள்ள மகாதேவன்குளத்தைச் சோ்ந்த இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்தாராம். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள். இதை அப்பெண்ணின் சகோதரா் முத்துக்குமரன் கண்டித்துள்ளாா். அதையும் மீறி இருவரும் பழகிவந்தனராம். இதனால் ஆத்திரமடைந்த முத்துகுமரன் தனது நண்பா்களுடன் இட்டமொழி அம்பேத்கா் நகருக்கு சென்று சதீஷை தேடியுள்ளாா். அப்போது அங்கு நின்ற முத்துராஜிடம்(19) விசாரித்தபோது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த முத்துகுமரன் மற்றும் அவரது நண்பா்கள் சோ்ந்து முத்துராஜை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் திசையன்விளை போலீஸாா், 3 போ் மீது வழக்குப் பதிந்து, முத்துகுமரன், தளவாய்பாண்டி ஆகிய இருவரை கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.