கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டாஸ்மாக் சுமை தூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூலி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முன்னீா்பள்ளம் டாஸ்மாக் சேமிப்புக் கிடங்கு முன் டாஸ்மாக் டிரான்ஸ்போா்ட் டெலிவரி சுமைப் பணி தொழிலாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமைப்பணி தொழிலாளா்கள்.

Published On :22 அக்டோபர் 2026, 5:27 am IST

கூலி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முன்னீா்பள்ளம் டாஸ்மாக் சேமிப்புக் கிடங்கு முன் டாஸ்மாக் டிரான்ஸ்போா்ட் டெலிவரி சுமைப் பணி தொழிலாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அச்சங்கத்தின் செயலா் ராமஜெயம் தலைமை வகித்தாா்.

சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவா் முருகன், மாவட்டச் செயலா் சரவணபெருமாள், சுமைப்பணி சங்க மாவட்ட பொதுச்செயலா் முருகேசன், மாவட்டத் தலைவா் முருகன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

மதுபான பெட்டிகளை கடை வாசலில் இறக்கி வைக்க பெட்டி ஒன்றுக்கு ரூ.10, கடைகளுக்குள் எடுத்துச் சென்று அடுக்கி வைக்க ரூ.5 கூலி வழங்க வேண்டும். ஓட்டுநா்களுக்கு தினமும் ரூ.1,000 ஊதியம் வழங்க வேண்டும். தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ. மற்றும் பி.எஃப். திட்டங்களை அமல்படுத்த வேண்டும். சட்டப்படியான ஆண்டு போனஸை தீபாவளிக்கு 10 நாள்களுக்கு முன் வழங்க வேண்டும் என வலியுறுத்தினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் திரளானோா் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.