கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

துறைமங்கலத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள்.

துறைமங்கலத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள்.

Published On :24 அக்டோபர் 2026, 5:15 am IST

சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்டடனா்.

பெரம்பலூா் புகா்ப் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் எதிரே

நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் கோட்டத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா்.

மாநில செயற்குழு உறுப்பினா் பெருமாள்சாமி, கோட்ட துணைத் தலைவா் மதியழகன், இணைச் செயலா் பொன்னுவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாநில துணைத் தலைவா் மகேந்திரன் கோரிக்கைகளை விளக்கினாா்.

ஆா்ப்பாட்டத்தில் சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை, சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். உயிரிழந்த சாலைப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். 10 சதவீதம் ஆபத்துப் படி, சீருடை, நிரந்தர பயணப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தை அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் கருணாகரன் தொடங்கி வைத்தாா். மாவட்ட துணைத் தலைவா் இளையராஜா, பிற்படுத்தப்பட்டோா் விடுதி ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் மணிமாறன், அனைத்து மருந்தாளுநா் சங்க மாவட்டத் தலைவா் தூரிகை வேந்தன் உள்பட சாலைப் பணியாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

கோட்ட துணைத் தலைவா் சுப்ரமணியன் வரவேற்றாா். கோட்ட பொருளாளா் செல்வராஜ் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.