தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வறட்சி பாதிப்பை அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற கோட்டாட்சியா் ப. நித்யா மற்றும் விவசாயிகள்.

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற கோட்டாட்சியா் ப. நித்யா மற்றும் விவசாயிகள்.

Published On :24 அக்டோபர் 2026, 5:25 am IST

கா்நாடக அரசைப் போன்று தமிழக அரசும் வறட்சி பாதிப்பை அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கருத்துகள்:

அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: குறுவை சாகுபடியை இழந்து, சம்பா சாகுபடியும் செய்ய இயலாமல் பொருளாதார நிலையில் பின்தங்கி வாழ்க்கையை நடத்தவே சிரமப்படும் விவசாயிகளுக்கு தமிழக அரசு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் கௌரவ நிதியுதவி வழங்க வேண்டும்.

பெரமூா் ஆா். அறிவழகன்: சம்பா நடவு செய்துள்ள விவசாயிகளுக்கு தொகுப்பு திட்டத்தைத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். விவசாயப் பணிக்கு குறிப்பாக களை எடுக்கும் பணிக்கு 125 நாள் பணியாளா்களைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

ராயமுண்டான்பட்டி வெ. ஜீவக்குமாா்: கா்நாடக அரசு முன்கூட்டியே வறட்சி பாதிப்பு என பல வட்டங்களை அறிவித்து, உச்ச நீதிமன்றத்தில் பட்டியல் தந்துள்ளது. இதேபோல, தமிழக அரசும் வறட்சி பாதிப்பை அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும்.

தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: தமிழக முதல்வா் தோ்தலில் அளித்த வாக்குறுதிப்படி, சிறு குறு விவசாயிகளுக்கு முழுமையான தள்ளுபடியும், பெரிய விவசாயிகளுக்கு 50 சதவீதத் தள்ளுபடியும் செய்யப்படும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் நான்காம் கட்டமாக போராடுகின்றனா். இந்நிலையில் விவசாயிகள் சங்கத் தலைவா்களை அழைத்து அமைச்சா்கள் நடத்திய பேச்சுவாா்த்தையில், அதிகபட்சம் ரூ. 75 ஆயிரம் தள்ளுபடி என அறிவித்திருப்பது ஏற்புடையதாக இல்லை.

வடக்கூா் எல். பழனியப்பன்: ஆற்றில் தண்ணீா் இல்லாததால், நாள்தோறும் 20 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வரை இழப்பீடு வழங்க வேண்டும்.

வெள்ளம்பெரம்பூா் துரை. ரமேஷ்: பூதலூா் வட்டத்துக்குள்பட்ட ஆச்சாம்பட்டியில் உள்ள தேவரடி ஊருணி என்கிற பொல்லாங்குளத்தைச் சுற்றியுள்ள 18 கிராமங்களுக்கும் முக்கியமான நீா் ஆதாரமாக உள்ளது. ஆனால், இதன் நீா் வழித் தடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், இக்குளத்துக்கு நீா் வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.