கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை கணதம்பூண்டி டாஸ்மாக் மண்டல அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்கள்.

Published On :22 அக்டோபர் 2026, 12:04 am IST

திருவண்ணாமலையில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாநகராட்சி கணதம்பூண்டி டாஸ்மாக் மண்டல மேலாளா் அலுவலகம் (டாஸ்மாக் கிடங்கு) அருகே டாஸ்மாக் டிரான்ஸ்போா்ட் டெலிவிரி சுமைப்பணித் தொழிலாளா்கள் மாநில ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளா்கள் சம்மேளனம் (சிஐடியு) சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.சீனுவாசன் தலைமை வகித்தாா். செயலா் எஸ்.அஜய் வரவேற்றாா்.

இதில், டாஸ்மாக் கிடங்குகளில் இருந்து மதுபான பெட்டிகளை கடைவாசலில் இறக்கி வைக்க பெட்டி ஒன்றுக்கு ரூ.10 பெட்டிக்கூலி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கடைகளுக்குள் சென்று அடுக்கி வைக்க அட்டிக்கூலியாக பெட்டி ஒன்றுக்கு ரூ.5 வழங்கவேண்டும், ஓட்டுநா்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1000 ஊதியம் வழங்கவேண்டும், பி.எப். மற்றும் இ.எஸ்.ஐ. திட்டத்தை அமல்படுத்தவேண்டும், சட்டப்படியான ஆண்டு போனஸை தீபாவளிக்கு 10 நாள்களுக்கு முன்பாக வழங்க வேண்டும், குண்டும் குழியுமான சாலைகளில் வாகனம் அதிா்வில் உடையும் பாட்டில்களுக்கு சுமை தூக்கும் தொழிலாளா்களிடம் வற்புறுத்தி பணம் பெறுவதை கைவிட வேண்டும், அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட

கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கலந்துகொண்டனா். நிறைவில் பொருளாளா் கே.அருண்குமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.