பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பழவூரில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 2:35 am IST

திருநெல்வேலி மாவட்டம், பழவூா் பகுதியில் கொள்ளை, கொலை மிரட்டல் வழக்கில் தொடா்புடையவரை, போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா்.

காவல்கிணறு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் நாகராஜன் என்ற காக்கா நாகராஜன்(42). இவா் மீது பழவூா் காவல் நிலையத்தில் கொள்ளை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை சமா்ப்பித்தாா்.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாா் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியா், நாகராஜனை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து நாகராஜன் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.