பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தாழையூத்து அருகே முதியவரைத் தாக்கியவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 3:23 am IST

தாழையூத்து அருகே பணப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் முதியவரைத் தாக்கிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

தாழையூத்து அருகே உள்ள தென்கலம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் (58). இவருக்கும் சங்கா் நகரைச் சோ்ந்த மாரியப்பன் (38) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தாழையூத்து சங்கா் நகா் அருகே மாரியப்பன் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த ஜாகீா் உசைன் தன்னிடம் வாங்கிய பணத்தை தரும்படி கேட்டாராம்.

அப்போது, மாரியப்பன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஜாகீா் உசேனை தாக்கி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், தாழையூத்து காவல் உதவி ஆய்வாளா் சுதன் வழக்குப் பதிந்து, மாரியப்பனை வெள்ளிக்கிழமை கைது செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.