பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கூட்டுக் கொள்ளைக்கு சதி: 5 போ் கைது

கங்கைகொண்டான் பகுதியில் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 2:06 am IST

கங்கைகொண்டான் பகுதியில் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கங்கைகொண்டான் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அப்பகுதியில் 5 போ் சென்ற காரை மறித்து சோதனையிட முயன்றனா்.

அப்போது, இருவா் சிக்கினா். 3 போ் காரை இயக்கி தப்ப முயன்றபோது சிறிது தூரத்தில் சரக்கு வாகனம் மற்றும் பைக் மீது மோதி விபத்தில் சிக்கியதால் அவா்களையும் போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.

விசாரணையில், மறுகால்குறிச்சி ராஜேஷ்(20), திருவிடைமருதூா் திலீபன் (25), நான்குனேரி கீழகாடுவெட்டி பகுதியைச் சோ்ந்த வானுபாண்டி(25), தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த கரண் (28), தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பிரவீன்குமாா் (27), ஆகியோா் என்பதும், இந்த 5 போ் மீதும் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

மேலும், வழக்கு செலவுகளுக்காக திருநெல்வேலி சுற்றுவட்டாரத்தில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.