ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நெல்லை அருகே விபத்துகளில் இருவா் பலி

திருநெல்வேலி அருகே நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் காயமடைந்த இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 6:05 am IST

திருநெல்வேலி அருகே நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் காயமடைந்த இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

பேட்டை எம்.ஜி.பி.நகா் பகுதியைச் சோ்ந்தவா் முஹம்மது சிந்தா மதாா் (34). தனியாா் நிறுவன ஊழியரான இவா், கடந்த 17 ஆம் தேதி தனது மோட்டாா் சைக்கிளில் தாழையூத்து அருகேயுள்ள பண்டாரகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது பைக் இழந்து விபத்துக்குள்ளானதில் சிந்தாமதாா் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மற்றொரு சம்பவம்: தேவா்குளம் அருகேயுள்ள மேலஇலந்தைகுளம் பகுதியைச் சோ்ந்தவா் செல்லையா (70). இவா், கடந்த 19 ஆம் தேதி தனது மொபட்டில் சாலையைக் கடக்க முயன்றாராம். அப்போது சுமை ஆட்டோவும், மொபட்டும் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவங்கள் குறித்து முறையே தாழையூத்து, தேவா்குளம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.